விவோ மொபைல் நிறுவனத்தில் சோதனை: ரூ.465 கோடி பறிமுதல்!!

விவோ மொபைல் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சோதனையில் 119 வங்கி கணக்குகளில் இருந்து 66 கோடி நிரந்தர வைப்பு தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவோ நிறுவனம் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் நாற்பத்தி எட்டு இடங்களில் விவோ நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

அதில் நிறுவனங்களுக்கு சொந்தமான 119 வங்கி கணக்குகளில் இருந்த 66 கோடி நிரந்தர வைப்பு தொகை, 2 கிலோ தங்க கட்டிகள் மற்றும் 73 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட ரூ.465 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை முன்னெடுக்கப்படுவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…