தோனி பிறந்தநாளை தெறிக்கவிட்ட ரசிகர்… கடலூரில் கண்கவரும் வீடு!

Dhoni

திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் கிரிக்கெட் வீரர் தோனியின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு வீட்டை தோனி படம் வரைந்து அசத்தியுள்ளார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார் ‌ இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஆவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோனி மீது உள்ள தீவிர பற்றால் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் கலரான மஞ்சல் கலரில் வண்ணம் அடித்து வீட்டில் ஒரு பகுதியில் டோனி படம் வரைந்து அசத்தினார்.

இதனால் உலக அளவில் உள்ள தோனி ரசிகர்கள் கோபியை போன் மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டினார் .மேலும் தோனியும் சமூக வலைத்தளம் மூலம் நன்றி தெரிவித்திருந்தார் இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஆனாலும் மனம் தளராமல் தோனி மீது கொண்ட நீங்கா பற்றால் தற்போது 07-07-2022 தேதி தோனி 41 வது பிறந்த நாளை முன்னிட்டு கோபி தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலரில் மாற்றியதோடு மட்டும் அல்லாமல் தனது வீட்டில் ஹேப்பி பர்த்டே தோனி என்ற வாசகம் எழுதியதோடு மட்டும் இல்லாமல் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

மேலும் இவரது காரில் தோனி படம் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரது வீட்டை இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்கள் இவரது வீட்டில் வரைந்து கொண்டு உள்ள தோனி படம் மற்றும் கோபிகிருஷ்ணனுடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…