போரிஸ் ஜான்சன் பதவி விலகல் : அதிகரிக்கும் நெருக்கடிகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகச் சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியிருப்பது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பித்த ஜான்சன், மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று, பிரிட்டன் நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை இல்லையென்று  அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியிலிருந்து ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினார்கள். இது போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் தொடர்ந்து பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் கான்செர்வ்டிவ் கட்சித் தலைவர் பதிவிலிருந்தும் அவர் விலகியுள்ளார். 

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார்.அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்து எடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் போரிஸ் ஜான்சன்,  கடந்த 2020-ம் ஆண்டு பிரதமராக இருந்து எனக்கு வரும் சம்பளம் போதவில்லை என்று கூறியது முதல் கொரோனா ஊரடங்கின் போது மது விருந்து கொடுத்தது வரை அவரது செயல்பாட்டை குறித்து மக்களும், கட்சி நிர்வாகிகளும்  எப்போதும் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published.