மும்பையில் தொடர் கனமழை..!! ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

டெல்லி, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் நுல்லா என்ற கிராமத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும் இதுவரை 6 பேர் காணாமல் போயுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்தார். மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்வதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சில முகாம் இடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு சில சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மும்பை, கோவாவில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.