வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்..!! குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்யும் நபர்..!!

மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் டெலிவரி பாய் ஒருவர் குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் பல இடங்களில் நீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மும்பையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பல வழித்தடங்களில் உள்ள பஸ்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை

இந்த மழையால் ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத வகையில் சாலைகளில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. 

இதனால் மும்பையில் டெலிவரி பாய் ஒருவர் வழக்கமாக செல்லும் இருசக்கர வாகனத்தில் செல்லாமல் குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி இருக்கிறது. மழையை பொருட்படுத்தாது உணவை டெலிவரி செய்த அந்த நபரை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.