சொந்த பைக்கால ஆப்பு வச்சுகிட்ட யூடியூப்பர் TTF வாசன்!!

பிரபல யூடியூப்பர் TTF வாசன் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையை சேர்ந்த TTF வாசன் 11 லட்சம் ரூபாய் பைக், 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவுடன் கூடிய ஹெல்மெட், 70 ஆயிரம் மதிப்புள்ள பைக்கர் சட்டை, 48 ஆயிரம் மதிப்புள்ள பைக்கர் பேண்ட் போன்றவற்றின் மூலம் பயணம் செய்யும் வீடியோக்களை யூட்யூபில் பதிவிடுவது வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் யூட்யூப்பில் அவரை பின் தொடர்கின்றனர். குறிப்பாக நடிகர்கள் இன்றி இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருப்பது என்றே கூறலாம். கடந்த வாரம் தனது பிறந்தநாளை ரசிகர்கள் முன்னிலையில் வாசன் கொண்டாடினார்.

அப்போது அவருக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது மற்றும் அதிவேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக TTF வாசன் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் 247 கிமீ வேகத்தில் பைக் ஓட்டுவதை யூடியூபில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இளைஞர்களை தவறான வழியில் நடத்துவதற்கு அவரது செயல் இருப்பதாக சமூக வலைதளங்களில் அவர் மீது புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதில் அளித்துள்ளார் சென்னை காவல்துறை TTF வாசன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.