இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா சரிந்து 79.04 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு எனப் பல துறைகள் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) அமைப்பு இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை குறித்து தரவுகள் வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இது மே மாதத்தில் 7.12 சதவீதமாக இருந்த நிலையில் இது மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக வந்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பால் ஜூன் மாதத்தில் பெரும் பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 6.62 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 8.03 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல் நகர்ப்புற வேலையின்மை ஜூன் மாதத்தில் 8.21 சதவீதத்திலிருந்து 7.30 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த தரவுகளின்படி ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 13 மில்லியன் வேலையின்மை உருவாகலாம் என கூறப்படுகிறது. இந்தியாவின் சேவைத்துறை ஜூன் மாதம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்த தரவு கூறுகிறது.