ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணங்க தவறிய வங்கிகள்..!! அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி..!!

இந்திய ரிசர்வ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூபாய் 1.05 கோடியும், இண்டஸ் இண்ட் வங்கிக்கு ரூபாய் 1 கோடியும் அபராதம் விதித்துள்ளது. விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளான கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு தலா சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தவிர சில கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு 1.5 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட், கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டம், நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தினால் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
கேஒய்சி(KYC) தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்காததால் இந்த வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது சில கூட்டுறவு வங்கிகளுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.