நகரும் டைனிங் டேபிள்..!! இதன் பெயர் இ-மொபிலிட்டி என்று நினைக்கிறேன் – ஆனந்த் மஹிந்திரா

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில்  நான்கு பேர் சாப்பிட்டுக்கொண்டே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமான வீடியோக்கள், சமூகத்தில் வித்தியாசமான செயல்படுபவர்கள், ஆச்சரியத்தக்க சாதனை செய்தவர்கள் ஆகியோர்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நான்கு இளைஞர்கள் நகரும் டைனிங் டேபிள் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டே பயணம் செய்கின்றனர்.

ஒரு இடத்தில் அந்த இளைஞர்கள் பெட்ரோல் ஸ்டேஷனில் பெட்ரோல் போட்டுவிட்டு அதன் பிறகு மீண்டும் பயணம் செய்துகொண்டே சாப்பிடுகின்றனர். இந்த வீடியோவை பதிவு செய்த ஆனந்த் மஹிந்திரா, இது இ-மொபிலிட்டி என்று நினைக்கிறேன். ‘e’ என்பது சாப்பிடுவதைக் குறிக்கிறது.

என்று நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். முதல் முறையாக சாலையில் நகர்ந்து கொண்டே செல்லும் மொபைல் டைனிங் டேபிளை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து உள்ளனர். ஆனந்த் மஹிந்திரா பதிவு செய்த இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published.