நம் நாட்டு இளைஞர்களின் மீது ஏன் இவ்வளவு பாகுபாடு – ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி சொந்த நாட்டு இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு மத்திய துணை ராணுவப் படை காவலர் தேர்வு எழுதிய இளைஞர்களுக்கு இன்னும் பணி நியமனக் கடிதம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் போராடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், போராட்டம் நடத்தும் இளைஞர்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதேபோல் ராகுல் தனது அறிக்கையில் வெளிநாடுகளில் இருக்கும் தன் நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வேளையிலேயே பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.  

நம் சொந்த நாட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆக்கியுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார். சொந்த நாட்டு இளைஞர்களிடம் ஏன் இவ்வளவு பாகுபாடு என காங்கிரஸ் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.