அரசு பள்ளியில் அவலம்… திடீரென பெயர்ந்து விழுந்த பள்ளி பால்கனி சுவர் கான்கிரீட்!

ஈரோட்டில் அரசு பள்ளி பால்கனியின் தடுப்பு சுவர் கான்கிரீட் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இடபற்றாக்குறையால் இந்த பள்ளிக்கு அருகில் கடந்த 2003 ம் ஆண்டு கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை தனியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள 10 வகுப்பறைகளில் 440 குழந்தைகள் பயின்று வருகின்றனர். 2003 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளதாக பெற்றோர் பலமுறை புகார் தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை பள்ளி விடுமுறை தினத்தில் கட்டிடத்தின் முகப்பில் பால்கனி சுவர் சிறிய அளவில் பெயர்ந்து விழுந்தது.

விடுமுறை தினத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இன்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி வகுப்பறைகளிலும் இது போன்று மேற்கூரை மோசமான நிலையில் இருப்பதாகவும், அமர்வதற்கு இருக்கை மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். பள்ளி முகப்பில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் பள்ளியை சீரமைக்க கோரி முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.