சசிகலா சுற்றுப்பயணத்தில் சலசலப்பு; சாமி பாட்டிற்கு நடனமாடிய பெண்களால் பரபரப்பு!

சசிகலா அரசியல் சுற்றுப்பயணத்தில் பெண் தொண்டர்கள் அதிமுக கொடியுடன் அம்மன் பாடலுக்கு சாமி வந்து நடனம் ஆடியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவில் நிலவும் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் அடைந்திருக்கும் நிலையில் சசிகலா தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கி ஆதரவாளர்கள் தொண்டர்களை சந்தித்து வருகிறார் .

அந்த வகையில் அவர் கடந்த வாரம் திருத்தணியில் தனது இரண்டாவது கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி தனது ஆதரவாளர்கள் தொண்டர்களை சந்தித்து இருந்த நிலையில்.

இன்று அவர் மூன்றாவது கட்ட அரசியல் சுற்றுப் பயணத்தை திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வெள்ளவேடு திருமழிசை பாக்கம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் தனது ஆதரவாளர்கள் தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது சசிகலவை வரவேற்பதற்காக அவரின் ஆதரவாளார் ஒருவரின் ஏற்பாட்டில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நடன கச்சேரி மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது அந்த நடன மேடையில் பெண் ஒருவர் அம்மன் பாடலுக்கு அம்மன் வேடத்தில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது.

சசிகலாவை காண வந்திருந்த அதிமுக பெண் தொண்டர்கள் 4 பேர் திடீரென்று அம்மன் பாடலுக்கு கட்சிக்கொடியுடன் சாமி வந்து நடனம் ஆடியது அனைவரின் பார்வையும் அங்கே திரும்பியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.