பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை; 24 மணி நேரத்தில் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்!

Child birth

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காலை கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பாலகட்டில் மீட்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், குமரன் நகர் பகுதியில் சேர்ந்த யூனஸ் மற்றும் திவ்யபாரதி தம்பதிக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தையை நேற்று காலை கடத்தப்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதைஅடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், 3 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பாலக்காட்டில் வைத்து குழந்தையை போலீசார் மீட்டனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பிடித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை தேடி வருகின்றதாக போலீசார் தெரிவித்தனர். குழந்தை கடத்தப்பட்டு 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…