பெங்களூருரில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து எரித்து கொலை!!

பெங்களூரில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அடுத்த ராமசந்திரா கிராமத்த்தில் புது வீடு ஒன்று கட்டும் பணி நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பணிகள் தொடங்கிய நிலையில் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்தவர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருக்கும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெங்கேரி போலீசார், துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா ஆகியோர் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்து இருந்து 50 மீட்டர் தூரத்தில் புதரில் வீசியது தெரியவந்தது. அதோடு பெண்ணிற்கு 25 முதல் 30 வயது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில் இளம்பெண் யாராவது மாயமாகி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதா? என்று பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.