அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்!!- சுனாமி அலர்ட்..

அந்தமான் கடல் பகுதி அருகே தென்கிழக்கு திசையில் 193 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடல் அடியில் 10 கிலோ மீட்டர் என்ற தொலைவில் 4.6- ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் தற்போது தொடர்ச்சியாக 5 முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே 2.37 மணி அளவில் 4.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக தற்போது 4.4 ரிக்டர் அளவுகோலில் பிற்பகல் 3.02 நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் அடுத்தடுத்து 1.55,2.06,2.37,3.02 மணிகளில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே போல் நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறுகின்றனர்.

மேலும், ஜம்மு – காஜ்மீரில் இருக்கும் தோடா மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 3.2 என்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.