பீகாரில் பரபரப்பு: ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து..!! பயணிகளுக்கு பாதிப்பு இல்லை..!

பீகார் ரயில் என்ஜினில் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தில் இருந்து பயணிகள் விரைவு ரயில் ஒன்று ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் காலை சுமார் 6 மணி அளவில் பெல்வா ரயில் நிலையம் வந்தடைந்தது.

அப்போது ரயில் என்ஜினில் இருந்து புகை வர ஆரம்பித்தது. புகை வர தொடங்கிய சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனை பார்த்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இன்ஜினில் பற்றிய தீ அடுத்தடுத்து பெட்டிகளில் பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது.

இதனால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…