சினிமா பாணியில் நடந்த சீட்டிங்… ஓட்டல் உரிமையாளருக்கு வடமாநில இளைஞர்கள் கொடுத்த ஷாக்!

Cheating

சினிமா பாணியில் போலி நகையை விற்று ஐந்து லட்சத்தை ஆட்டையை போட்ட வட மாநில கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியில் உள்ள பசும்பொன் தேவர் வீதியை சேர்ந்தவர் பாலு. 45 வயதான இவர் மண்ணரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மே 15 ம் தேதி அவரது ஹோட்டலுக்கு சாப்பிட வந்த வடமாநில இளைஞர் ஓட்டல் உரிமையாளரான பாலுவிடம் தன்னை ரோகித் என்று அறிமுகமாகியிருக்கின்றார்.

பாலு இந்தி மொழியில் பேசுவதனால் வடமாநில இளைஞரும் இந்தியில் பேசி பழகியிருக்கின்றார். இந்தநிலையில் ரோகித் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக ஒரு இடத்தில் குழி தோண்டிய போது ஒரு பானையில் தங்கம், பழங்கால நாணயம் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அப்போது விக்டோரியா மகாராணி படம் பதித்த நாணயத்தையும், தங்க காசு மாலையையும் காண்பித்திருக்கின்றார். 80 லட்சம் மதிப்பிலான இதனை குறைந்த விலையிலே விற்க்கப்போவதாகவும் பாலுவிடம் தெரிவித்திருக்கின்றார். நீங்களே புதையல் மாலையை வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் இந்த தங்க மாலை தங்கமா இல்லையா என்பதனை அறிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு பகுதியினை கழட்டி தருவதாக தெரிவித்த வடமாநில இளைஞர் ஒரு பகுதியினை கழட்டி பாலுவிடம் தந்திருக்கின்றார். பாலு அதனை தங்க நகை கடையில் உரசி பார்த்திருக்கின்றார். அது தூய தங்கமென பாலுவிடம் கடைக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


இந்த நிலையில் தங்கத்தை வாங்க ஆசைப்பட்ட பாலு தங்கத்தின் விலை குறித்து கேட்டுள்ளார். அதற்க்குள்ளாக கோயமுத்தூருக்கு வடமாநில இளைஞன் சென்றுவிட்டதாகவும் தங்கம் வேண்டுமென்றால் கோயமுத்தூருக்கு வரவேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றார்.


80 லட்சம் மதிப்பிலான எடை அளவு கொண்ட ஆபரணம் 5 லட்சத்துக்கு தருவதாக வடமாநில இளைஞன் தெரிவித்திருக்கின்றான். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள வடமாநில இளைஞனிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடலாமென நினைத்து ஓட்டல் ஓனர் பாலு பணம் புறட்ட ஆர்ம்பித்திருக்கின்றார். ரொக்கமாக கையிருப்பில் ஐந்து லட்சம் இல்லாததனால் மனைவின் முந்தைய நகைகளை அடகு வைத்து பணம் புறட்டியிருக்கின்றார். காரில் மனைவி ஐந்து லட்சம் பணத்துடன் மே 20 ம் தேதி திருப்பூரில் இருந்து கோவைக்கு வந்திருக்கின்றார்.

காந்திபுரம் பகுதியில் உள்ள டாக்டர் நஞ்சப்பா சாலைக்கு வந்ததும் பாலு செல்போனில் வட மாநில இளைஞர் ரோகித்தை அழைத்திருக்கின்றார். ரோகிதுடன் இருவர் வந்திருக்கின்றனர். பாலுவிடம் அவர்களை கிரன் குமார் என்று அறிமுகப்படுத்தியிருக்கின்றார். மற்றொருவர் வயதான பெண்மணி. பாலு வடமாநிலத்தவரிடம் காரில் வைத்து 5 இலட்ச ரூபாய் பணத்தை கொடுத்து, தங்கத்தை பெற்றுக் கொண்டு திருப்பூருக்கு சென்றுள்ளார்.


இதனை தொடர்ந்து கடந்த 28 ம் தேதியன்று பாலு தங்க நகையை சோதனை செய்து பார்த்துள்ளார். இந்த நிலையில போலியான தங்கத்தை கொடுத்து இருப்பதும், தன்னை அந்த நபர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. போலியான தங்கத்தை கொடுத்து 5 இலட்ச ரூபாய் பணம் ஏமாற்றி இருப்பதாக பாலு கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தந்த நிலையில் புகாரின் பேரில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.