பிரியாணியில் கரப்பான்பூச்சி; அலறியடித்துக் கொண்டு ஓடிய அசைவப் பிரியர்கள்!

cockroach

ஆரணியில் மீண்டும் பிரியாணியால் சர்ச்சை ஓட்டல் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வைரல் வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் பரவி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் 5ஸ்டார் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகின்றன. இந்த ஓட்டலில் இன்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகின்றன.

மேலும் மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பேரதிர்ச்சியாக சாப்பிட்ட
பிரியாணியில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சியை கண்டு
அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடையின் ஊழியரிடம் மூர்த்தி தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைரலாக வீடியோ சமூக வளைதலங்களில் பரவி வருகின்றன. இது சம்மந்தமாக வாடிக்கையாளர் சாப்பிட்டதற்கு பில் கேட்டுள்ளனர் ஆனால் கடை ஊழியர்கள் பில் கொடுக்க
மறுத்துள்ளனர்.

இதனால் இருதரப்பினர்யிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடை
ஊழியர்கள் சாப்பிட்டதற்கு வாடிக்கையாளிடம் பில் கொடுத்தனர். ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன்
சிறுமி ஆகிய 2 பேர் உயிரழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன.

மேலும் இன்று நடந்த இச்சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவு பிரியர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் கண்துடைப்புக்கு ரெய்டு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.