மிதக்கும் சோலார்..!! மின் உற்பத்தியை தொடங்க தீவிரம் காட்டும் நிறுவனம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி திட்டமாக கருதப்படும் தெலங்கானாவில்  ராம குண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவு வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிவிட்டதாக தேசிய அனல் மின் கழகம் அறிவித்துள்ளது.

floating solar power: India achieves lowest cost of floating solar power  globally, Energy News, ET EnergyWorld

இதன்மூலம் தென்னிந்தியாவின் மிதக்கும் சூரிய சக்தியின் மொத்த வணிக செயல்பாடு 217 மெகாவாட்டாக உயர்ந்தது. இது தவிர கேரள மாநிலத்தில் 92 மெகாவாட் மிதக்கும் சோலார் மற்றும் ஆந்திராவில்  25 மெகாவாட் மிதக்கும் சோலார் செயல்பட்டு வருகிறது. 

தற்போது ரூ.423 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இத்திட்டத்தில் நீர்த்தேக்கத்தின் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Will floating solar arrays (floating photovoltaics) float or sink?

40 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் 2.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 11,200 சோலார் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 

இதை 33 கிலோ வோல்ட் நிலத்தடி கேபிள்கள் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.மிதக்கும் சோலார் பேனல்கள் இருப்பதால், நீர்நிலைகளில் இருந்து ஆவியாதல் விகிதம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். 

World's largest floating solar plant outside China' ready in weeks after  'record' build | Recharge

இதனால் ஆண்டுக்கு சுமார் 32.5 லட்சம் கன மீட்டர் நீர் ஆவியாவதை தவிர்க்கலாம். சோலார் மாட்யூல்களுக்கு அடியில் உள்ள நீர்நிலைகள் அவற்றின் சுற்றுப்புற வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. அதன் மூலம் சோலார் பேனல்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி மேம்படுகிறது என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…

ஓசூரில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியாருக்கு சொந்தமான காவேரி மருத்துவமனையில் முதன்முறையாக கல்லீரல் மாற்று…