புத்தகத் திருவிழா: சிறுவயது முதலே வாசிப்பில் கவனம் செலுத்துங்கள் – பேச்சாளர் பாரதி பாஸ்கர்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கி ஜூலை 4ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் இரவு நடந்த கருத்தரங்கில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 

தொடங்கியது 'பொங்கல் புத்தகத் திருவிழா 2021' | nakkheeran

அப்போது அவர் தர்மபுரியில் தான் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மன்னர் அதியமான் நெல்லிக்கனி தந்தார். பெண்பாற் புலவரை உயரிய மதிப்புடன் நடத்திய மண் இது. இன்று நம்மில் பலரின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வது செல்போன்கள் தான்.  செல்போன்கள் மனிதர்களை அவற்றின் போக்குக்கு இழுத்துச் சென்றுவிடும். 

செல்போன்களுக்கு பதிலாக நூல்கள் வாசிப்பில் நம் நேரத்தை செலவிட பழகிக் கொள்ள வேண்டும்.இந்தப் பழக்கம், மண்ணில் விழும் விதை துளிர் விட்டு செடியாகி, கனிகளை தருவதை போன்று நமக்கு பலனளிக்கும்.சிறுவயது முதலே வாசிப்பில் கவனம் செலுத்தும் போது குழந்தைகள் நற்சிந்தனையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக உருவாக்குவர்.

திருப்பூரில் 14ஆம் தேதி தொடங்குகிறது புத்தக திருவிழா - என்னென்ன  நிகழ்வுகளுக்கு திட்டம்? | Book Festival kicks off in Tirupur on the 14th,  what events are planned ...

தேவையற்ற செயல்களில் நேரத்தை விரயமாக்காமல் வாய்ப்பு அமையும் போதெல்லாம் அனைவரும் புத்தக வாசிப்பில் ஈடுபடுங்கள். புத்தகத் திருவிழா போன்ற இடங்களில் தேடிப்பிடித்து நல்ல நூல்களை வாங்கி பயனடையுங்கள் என்றார். புத்தகங்களை நம்முள் அனுமதிப்பதன் மூலம் உள்ளிருக்கும் இன்னொரு மனிதன் வெளிவருவார் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…