ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்..!! வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி..!!

ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில்  தேர் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகியது. 42 நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவானது உற்சாகமான மக்கள் மற்றும் நெரிசலான கடைகள் கொண்டு ஆண்டுதோறும் நடைபெறும். 

லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கு கொரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு இந்த திருவிழா நடைபெறாமல்  இருந்தது தற்போது ஓரளவு கொரோனா குறித்த  நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற்றது .

இந்நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வந்தது. இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். அவரின் டீவீட்டில்  தேரோட்டத்தின் சிறப்பு நாளுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஜெகந்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். முன்னதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பதான் ஆகியோர் ஒடிசா ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *