அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த போகும் கறுப்பின பெண்..!!

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்மணி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வு பெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.

இதையடுத்து கருப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதன்படி, நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்தார்.

இந்நிலையில் கறுப்பினத்தை சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், 51 வயதான கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு முதல் கருப்பின பெண் நீதிபதி நியமனம்- Dinamani

இதன்மூலம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். இவருக்கு முன்பு இரு கருப்பின ஆண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 6வது பெண் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *