இனி எல்ஐசியை நம்பினால் எதிர்காலம் இல்லை..!! கதறும் முதலீட்டாளர்கள்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் எல் ஐ சி பங்குகள் விற்பனை உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணத்தால் இந்திய பங்குகளுக்கான வெளிநாட்டு தேவையை கடுமையாக பாதித்துள்ளது. 

தொடர்ந்து பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு சரிவைக் கண்டு வருகிறது. இந்நிலையில் எல் ஐ சி நிறுவன பங்குகள் விலை தொடர்ந்து சரிவு போக்கில் இருப்பது கவலை தருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

LIC IPO: Domestic mutual funds pick up 71% of LIC IPO's anchor portion |  India Business News - Times of India

இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும் பங்கு முதலீட்டாளர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயலாளர் துஹான் காந்த பாண்டே இம்மாத துவக்கத்தில் தெரிவித்தார்.

எல் ஐ சி ஐபிஓ. பட்டியலிடப்படும் போது எல்ஐசியின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.4.8 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. அதாவது பங்குச் சந்தையில் அடியெடுத்து வைத்து ரூ.1.2 லட்சம் கோடியை இழந்து இருக்கிறது.

எந்த நேரத்திலும் உலகளாவிய சந்தைகளில் பெரும் வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.

இதனால் எல்ஐசி பங்கு தொடர்ந்து சரியும் என்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *