கருக்கலைப்பு உரிமைக்குத் தடை..!! அமெரிக்காவில் தொடரும் போராட்டம்..!! 

அமெரிக்க கருக்கலைப்பு எதிர்ப்பு திட்டத்திற்கு அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த சூழலில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல மாகாணங்களில் மக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

கடந்த 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் 8 மாகாணங்களில் கருக்கலைப்பு தடை சட்டம் அமெரிக்காவில் உடனடியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அமெரிக்காவில் பெண்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

Home abortions: MPs have final chance to save service | openDemocracy

இதில் பீனிக்ஸ், அரிசோனா போன்ற மாகாணங்களில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது . பெண்களை தாயாக கட்டாயப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

இது பெண்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் என்றார். உச்ச நீதிமன்றத்தின் முடிவு இறுதி அல்ல என்றும் மாகாணங்களிலும் மத்தியில் கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உள்ளிட்ட தலைவா்களும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தீா்ப்பை விமா்சித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *