நெட்பிளிக்ஸ் எடுத்த அதிரடி முடிவு..!! துணை நிற்க போகும்  கூகுள்..!!

முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்கும் நோக்கில் கூகுள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓடிடி மூலம் புதிய திரைப்படங்களை பார்த்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது புது திரைப்படங்களை கொடுப்பதில் அனைத்து ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது சப்ஸ்கிரைபர்களை அதிகளவில் இழந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

Time to buy Netflix as it consolidates between $180 and $190? | Invezz

இதுகுறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ டெட் சரண்டோஸ் கூறியபோது எப்போதும் போல் மற்ற பிளான்கள் விளம்பரம் இல்லாமல் இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் டெட் சரண்டோஸ் நிறுவனத்தின் ஓடிடியை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு விளம்பரத்துடன் கூடிய புதிய பிளான் கொண்டு வர இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த குறைந்த கட்டண திட்டத்திற்காக விளம்பரங்களை சேகரிப்பதற்காக கூகுள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த பிளான் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஓடிடி நிறுவனங்களில் அதிக கட்டணம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தான் உள்ளது என்று பொதுமக்கள் புகார் கூறி வரும் நிலையில் தற்போது இந்த புதிய கட்டண பிளானை நெட்பிளிக்ஸ் கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *