தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) – ரத்தக்கண்ணீர்

இந்திய வரலாற்றில் சமூகத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட அரசியல் படம் என்றால் இரண்டே இரண்டு படங்களைத்தான் சொல்ல முடியும் . அந்த இரண்டுமே தமிழ் படங்கள் என்பது தான் இதில் பெருமைக்குரிய விடயம் . அதில் முதலாவது பராசக்தி ( 1952) என்றால் இரண்டாவது படம் “ரத்தக்கண்ணீர்” .1954ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கொடுத்த மற்றுமொரு கொடை.

இரண்டு வருட இடைவெளியில் சினிமா மூலம் அடுத்தடுத்து நடந்த கலாச்சார பூகம்பம் தான் பிற்பாடு தமிழக அரசியலில் நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் விதை .. இதர மாநிலங்களில் பிராந்திய உணர்வுகள் பிராந்திய கட்சிகள் சமீபமாகத்தான் தலையெடுத்து வரும் சூழலில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டது என்றால் அதற்கு பெரியாரின் திராவிட இயக்கமும் அந்த இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய இந்த இருபடங்களும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.அப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு படங்களுக்கும் பல விதங்களில் ஆச்சரியப்படத்தக்க சில பொதுமைகள் உண்டு.

இரண்டுமே நாடகத்திலிருந்து உருவான சினிமாக்ள் இரண்டு படங்களையும் தயாரித்தவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள். மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் புகழ்பெற்ற இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்பெரியாரின் சீடரும், மு.கருணாநிதியின் சமகாலத்தவருமான திருவாரூர் கே.தங்கராசு எழுதிய மேடை நாடகமான ரத்தக்கண்ணீர் 14 ஜனவரி 1949 அன்று திருச்சிராப்பள்ளியில் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது.

அன்று முதல் எங்கு நடந்தாலும் இந்த நாடகம் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப்பெற்று வெற்றி மேல் வெற்றி பெற்றது. அதில் நாயகனாக நடித்த நடிகர் எம்.ஆர். ராதா பல வருடமாக நாடகத்துறையில் இயங்கி வந்தாலும் இந்த நாடகம் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. . இந்த நாடகம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி மலேசியா சிங்கப்பூர் பர்மா மற்றும் சிலோன் போன்ற இடங்களிலும் அரங்கேற்றப்பட்டு அங்கும் அது சமமான வெற்றியைப் பெற்றது

பராசக்தி வெற்றிக்குப்பின் அதே பாணியில் திராவிட கருத்துக்களை மையமாக கொண்ட இந்த நாடகத்தை சினிமாவாக எடுக்க நேஷன்ல் பிகசர்ஸ் பெருமாள் முதலியார் முன் வந்து தன் ஆஸ்தான இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு வை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார்.

நாயகனாக எம் ஆர் ராதாவை நடிக்க ஒப்பந்தம் செய்வதில் சிறிய குழப்பம் உண்டனாது . காரணம் அவரது முரட்டு சுபாவத்தால் அந்தக் காலத்துத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலர் எம் ஆர். ராதா என்றாலே முகம் சுளித்தனர் . முன்பே அவர் சில படங்களில் நடிக்க வந்த போது பல கம்பெனிகளில் பிரச்சனை உண்டானதே இதற்கு காரணம். ராதாவும் இனி சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்து நாடகத்தில் முழு கவனம் செலுத்தி ரத்தக் கண்ணீர் மூலம் மீண்டும் புகழ் உச்சிக்கு வந்தார் . பலரும் பழைய கதைகளை கூறி தயாரிப்பாளர் பெருமாலிடம் ராதாவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று பலரும் கூறினாலும் பராசக்தியில் எப்படி கணேசன் தான் நடிக்க வேண்டும் என பெருமாள் பிடிவாதமாக இருந்தாரோ அது போல இந்த படத்திலும் ராதா தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக முடிவெடுத்தார்.

ஆனால் எம். ஆர் ராதாவர்களோ சுலபத்தில் பழைய காயங்களை மறக்கவில்லை. தன் வசதிக்கு ஏற்றார் போல் தயாரிப்பு கம்பெனி சில விஷயங்களை விட்டுக்கொடுத்ததால் தான் நடிப்பதாக இறுதியில் முடிவுக்கு வந்தார் . அதில் படத்தை மைய கருத்துக்களில் வசனக்களில் மாறுதல் எந்தக்காரணம் கொண்டும் தலையீடு இருக்கக்கூடாது. இரவுகலில் தான் தொடர்ந்து நாடகத்தில் நடிப்பதால் பகலில் மட்டுமே படபிடிப்பு நடத்த வேண்டும் . நாடகத்தில் தன்னோடு நடித்த சிலரை சினிமாவிலும் நடிக்க வைக்க வேண்டும் என்பது போல சில கோரிக்கைகள் அவர் முன் வைக்க அவற்றை பெருமாள் ஏற்றுக்கொள்ள பி எம் ஆர் ராதாவும் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் .இப்படத்தின் கதையானது பாலு (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) என்பவர் பார்வையாளர்களிடையே தனது உரையையும் மற்றும் ஒரு கதையையும் விவரிப்பதன் மூலம் தொடங்குகிறது.

Ratha Kanneer - Wikipedia

மோகனசுந்தரம் (எம்.ஆர்.ராதா) என்பவர் ஒரு ஊதாரி, புகைப்பவர் மற்றும் குடிகாரர் ஆவார். அவர் பெரியவர்களையோ தனது சமூகத்திற்கு கீழானவர்களையும் மதிக்காதவர். அவர் ஒரு இரக்கமற்றவர். தனது சொந்த தாயை (எஸ்.ஆர்.ஜானகி) கூட அடிக்கும் தன்மை உடையவர். அவர் இந்தியா திரும்பியவுடன் சந்திராவை (ஸ்ரீரஞ்சனி) திருமணம் செய்து கொள்கிறார். அவள் பண்பாடு மிக்க, நல்ல நடத்தை குணம் கொண்ட பழமை வாய்ந்த ஒரு கிராமத்து பெண். மோகனசுந்தரம், காந்தா (எம்.என்.ராஜம்) என்ற ஒரு விபச்சாரியுடன் உறவு வைத்து கொள்கிறார். அவரது நண்பர் பாலு அவருக்கு அறிவுரை கூறவும், அவரை திருத்தவும் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் மோகன் அதை காதில் வாங்கவில்லை. காந்தாவின் தாயின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் மோகன், தன் தாயின் மரணத்திற்கு பின் நடக்கும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள தவறிவிட்டார். மோகன் காந்தாவின் மீது தன் மனதை தொலைக்கிறார். அவனுடைய எல்லா சொத்துக்களையும் அவளிடம் ஒப்படைக்கிறான். மேலும் தனது வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு அன்பான நபர்களையும் இழக்கிறான். அவர் தனது கடைசி செல்வத்தையும், நெருக்கமானவர்களையும் இழக்கும் போது தொழுநோயால் பாதிக்கப்படுகிறார்.

Ratha Kanneer (ரத்தக்கண்ணீர்) - सुपर हिट तमिल फिल्म -

பின்னர் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அவரது நோய்க்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் காந்தாவும் அவரை கூட்டாளிகளும் அவரை புறக்கணித்து வெறுக்கிறார்கள். அவள் அவனை ஒரு அறையில் வைத்து தீண்டத்தகாதவனை போல் நடத்துகிறாள். விரைவில் காந்தா, மோகனை தூக்கி வெளியே இருக்கிறாள். அவன் தனது பார்வையை இழக்கிறான். அவர் ஏழை குஷ்டரோகியாக, உணவுக்காக தெருக்களில் பிச்சை எடுக்கிறார். தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், வாழ்க்கையின் மதிப்பையும் மற்றவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறார். அவர் தனது மனைவி, தாய் மற்றும் தன்னை சுற்றியுள்ளவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்காக வருத்தம் அடைகிறார். அவர், தனது பற்றாக்குறை வாழ்கை வாழும் மனைவியை சந்திக்கிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில் அவர் ஒரு குருடராக இருக்கிறார். மேலும் அவள் அவரின் சிதைந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட முகத்தை மட்டுமே காண்கிறாள். அவர் தனது பழைய நண்பரான பாலுவை சந்திக்கிறார். மூவரும் இறுதியாக ஒருவருக்கொருவர் அடையாளம் காண்கிறார்கள். ஒரு வான் விபத்தில் நடக்கும் காந்தாவின் மரணம் குறித்து மோகன் பாலு மூலம் அறிகிறார். மோகன் தன்னுடைய ஒரு சிறந்த மனிதனால் மட்டுமே சந்திராவை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் சந்திராவை பாலுவுடன் திருமணம் முடிக்கிறார். அவர் பிரியும் போது தனது வார்த்தைகளை பேசுகிறார். மேலும் ஒரு குஷ்டரோகியின் சிலையை தனது தோற்றத்தில் உயர்த்தும்படி கேட்டுக்கொள்கிறார். தன்னை போன்ற ஊதாரிகளுக்கு உதாரணமாக இருக்கும் என்று கூறுகிறார்.

இறுதி காட்சியில், பாலு மோகனின் சிலைக்கு முன்னால் (ஆரம்பத்தில் பார்த்தது போல்) தனது கதையை முடித்து, நீதியையும் வாழ்க்கையின் மதிப்பையும் பற்றிய ஒரு பாடலுக்குள் நுழைகிறார்.

ஆர். ஆர் சந்திரன் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு இயக்குனர்களில் ஒருவரான பஞ்சு படத்தொகுப்பு செய்ய பின்னணி இவை விஸ்வநாதன் ராம் மூர்த்தியும் பாடல்களை சி எஸ் ஜெயராமனும் கவனித்துக்கொண்டனர் பாடல் வரிகளை மகாகவி பாரதியார், பாரதிதாசன், உடுமலை நாராயண கவி மற்றும் கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழுதினர்.”குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது” பாடல் படம் வெளியானபின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது

இப்படத்திற்கு எம் ஆர் ராதாவிற்கு ஊதியமாக 1 லட்சம் வழங்கப்பட்டது. வில்லி காந்தாவாக நடிக்க எம்.என்.ராஜம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்காலத்தில் வேறு யாரும் இந்த எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க முன்வர மறுத்ததாகவும் பிற்பாடு இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு தன்னிடம் வேண்டுகோள் விடுத்தமைக்காக தான் அந்த பாத்திரத்தை ஏற்றதாகவும் எம் என் ராஜம் பிற்பாடு ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இக்கதாப்பத்திரத்திற்காக ராஜம் தனது எடையை கூட்ட வேண்டியிருந்தது என்றும் . ராதாவை படிக்கட்டில் இருந்து கீழே தள்ள வேண்டிய காட்சியில் தான் நடிக்கத் தயங்கியதாகவும் பின்னர் இயக்குனர்கள் கோரிய பின்னர் துணிந்து எட்டி உதைத்து நடித்ததாகவும் கூறியுள்ளார்.

M.R. Radha - IMDb

எம். ஆர் ராதா (மோகன்) தனது மனைவி சந்திராவின் கைகளை தனது நண்பர் பாலுவிடம் (எஸ்.எஸ். ராஜேந்திரன்) இணைக்கும் இறுதிக்காட்சியை படமாக்கும்போது, ​​​​ மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மிகப்பெரிய சர்ச்சைகள் உண்டாகும் என இயக்குனர்கள் தயங்க . அந்த காட்சியை படமாக்காவிட்டால் தான் மேற்கொண்டு இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று எம்.ஆர் ராதா மிரட்டியதால் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் இறுதியில், ராதாவின் விருப்பப்படி நாடகத்தில் இருப்பது போலவே படமாக்கச்சொல்லி பெருமாள் உத்தரவு பிறப்பிக்க பின் மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது

1954 அக்டோபர் 25ம் நாள் தீபாவளியன்று வெளியான ரத்தக்கண்ணீர் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகபெரிய வெற்றியைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *