ஐபோன் வரலாற்றில் புதிய சாதனை..!!!  பத்து மாதம் கழித்து ஆற்றில் கிடைத்த ஐபோன்..!

பத்து மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தொலைத்த ஐபோனை கண்டெடுத்த போது, அந்த ஐபோன் வழக்கம் போல் வேலை செய்தால் அதன் உரிமையாளர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஓவன் டேவிஸ் என்பவர் தன் ஐபோனை ஆகஸ்ட் 2021 ல் இளங்கலை விருந்தின்போது சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதியில் தொலைத்தார். இதையடுத்து தேடிப்பார்த்தும் அவரால் ஐபோனை திரும்பக் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

அதன்பின் ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பின் அதே ஆற்றில் தன் குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் மேற்கொள்ளும்போது, டேவிஸின் ஐபோனை பார்த்தார். பின் ஆற்றிலிருந்து காணாமல் போன அந்த ஐபோனை எடுத்தார்.

The iPhone that worked after lying in the river for 10 months .. The fun  that happened

போன் ரீ ஸ்டார்ட் ஆகாது என தெரிந்து போனை உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். போன் சார்ஜரில் இருந்து மின்சாரத்தை பெற்று சார்ஜ் ஆக தொடங்கியது. 

அத்துடன் அவர் அதை இயக்கியபோது, வால்பேப்பர் ஆகஸ்ட் 13 தேதியுடன் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ஸ்கிரீன்சவேர் பார்த்தார் . காணாமல் போன ஐபோன் பற்றி அந்த புகைப்படத்துடன் மிகுவல் பச்சேகோ முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

ஆனால் ஐ போனை தொலைத்த டேவிஸ் சமூக ஊடகங்களில் இல்லை. இருந்தாலும் அவரது நண்பர்கள், தொலைபேசியை அடையாளம் கண்டு பச்சேகோவுடன் தொடர்புகொள்ள டேவிஸுக்கு உதவினார்கள். அதனை தொடர்ந்து ஆற்றில் விழுந்த தன் ஐபோனை 10 மாதங்களுக்கு பிறகு வழக்கம் போல வேலை செய்யும் நிலையில் டேவிஸ் பெற்றுக் கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *