கார் விபத்துகளை குறைக்க புதிய திட்டம்..!! கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு..!!

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன விபத்தின் போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்படும் கார்கள், பாதுகாப்பை விரும்புவர்களின் தேர்வாக இருந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கார்கள் விலை அதிகமாக இருப்பதால், இந்தியா போன்ற நாடுகளில் சாதாரண பாதுகாப்பில்லாத கார்களின் விற்பனையே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில், பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு வழங்கும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கூறிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் வாகனங்களில் பாதுகாப்பு சாதனம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படுகிறது.
சாலை விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.மேலும், சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் அறிமுகமாக உள்ளது.
இத்திட்டத்தில், சர்வதேச வழிமுறையை பின்பற்றி, பாதுகாப்பாக கார்களுக்கு அவற்றின் திறனுக்கு ஏற்ப ஐந்து நட்சத்திர குறியீடு வழங்கப்படும். இதற்கான வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.