போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் நெட்ஃபிக்ஸ் நிறுவனம்..!!

நெட்ஃபிக்ஸ்  நிறுவனம் வருவாயில் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் அதன் எதிரொலியாக நிறுவனத்தில் பணிபுரியும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய  போவதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது. 

அமேசான், வால்ட் டிஸ்னி மற்றும் ஹுலு ஆகிய போட்டியாளர்களின் போட்டி தீவிரமடைந்தது. இந்த அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும்  அண்மையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நெட்ஃபிக்ஸ்  நிறுவனம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

10,000 பேர் பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுக்கும் நிறுவனங்கள்.. ஊழியர்கள்  கண்ணீர்..! | More than 10000 people have been layoff from Indian startups -  Tamil Goodreturns

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் அமெரிக்காவிலுள்ள நெட்ஃபிக்ஸ் ஊழியர்கள் ஆவர். கடந்த மாதம் நிறுவனம் 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம்  நெட்ஃபிக்ஸ் சில ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தலையங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணவீக்கம் உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து கடுமையான போட்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக முதல் காலாண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது.

60% ஊழியர்கள் பணிநீக்கம்.. திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..! |  Indiabulls owned Yaari layoff 150 employees - Tamil Goodreturns

நடப்பு காலாண்டில் இன்னும் அதிகமான இழப்புகள் இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது . நிறுவனம் மலிவான மற்றும் உள்ளடக்கிய சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் நெட்ஃபிக்ஸ் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *