இனி எனக்கு அப்பாவின் அடையாளம் வேண்டாம்..!! பெயரை மாற்றிக்கொண்ட எலான் மஸ்க் மகன்..!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மகன் தனது பெயரையும், பாலினத்தையும் மாற்ற இருப்பதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் மகன் அலெக்சாண்டர் மஸ்க் தனது புதிய பாலின அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டபூர்வமாக தனது பெயரை மாற்ற மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அரசின் சட்டத்தின்படி அவருக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்த நிலையில்  பாலினத்தை மாற்றி கொள்ள முடிவு செய்து உள்ளார். அந்த வகையில் அலெக்சாண்டர் மஸ்க் தனது 18 வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே தனது பெயரை விவியன் ஜென்னா வில்ஸன் என மாற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Grimes confirms she and Elon Musk have named son X Æ A-12 | Metro News

பெயர் மாற்றத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிடும்போது இனிமேல் நான் எந்த வகையிலும் தனது தந்தையுடன் வாழ விரும்பவில்லை என்று அவரிடம் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் அதனால் பெயரை மாற்றுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவியன் ஜென்னா வில்சன் என்ற பெயரில் ‘வில்சன்’ என்பது அவரது தாயார் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டுள்ள அவர் தனது தாயாரின் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *