காத்துவாக்குல ரெண்டு காதல்: ரீல் ரியலான சம்பவம்!!
கடந்த சில நாட்களாக சினிமா பட பாணியில் பல நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைப்போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பெற்ற சம்பவம் 90 ஸ் கிட்ஸ்கள் பொங்கி வரும் அளவிற்கு மாறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்திப். இவர் கூலி வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சந்திப் அதே பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்பவரை சந்தீப் காதலித்துள்ளனர். ஒரு கட்டத்தில் காதல் முற்றி போகவே லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளார் சந்திப். அப்போது அங்கு வேலைக்கு வந்த சுவாதி குமாரியை சந்தீப் காதல் வலையை வீசியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் இரண்டு பேருக்குமே தெரியவந்த நிலையில் பின்னர் சந்தீப்ஒரு வழியாக சமாதானம் செய்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களது குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதனையும் தாண்டு தற்போது சந்திப் தனக்கு இரண்டு காதலிகளும் வேண்டும் என்ற முடிவு எடுத்துள்ளாராம். அதோடு நான் இருவரையும் காலிக்கிறேன். இவர்களில் ஒரு வரை கூட விட்டு பிரிய முடியாது எனக் கூறியுள்ளார்.