குறைந்த விலையில் ரஷ்யாவிடம் நிலக்கரி வாங்க இந்தியா திட்டம்..!!

கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரி வாங்க  இந்தியா முன்வந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது என ராய்ட்டர்ஸ் நிறுவனம்  செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையும் 30 சதவீத தள்ளுபடி விலையில் இந்தியா வாங்கி வருவதாக தெரிகிறது.  ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்ததால் 30% தள்ளுபடி விலையில் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. 

அதன்படி 331.17 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. அதேபோல் 20 நாட்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பு 31 மடங்கு அதிகரித்து 2.22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ரஷ்யா vs ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவிற்கு அடிச்ச லக்.. சலுகை விலையில் கச்சா  எண்ணை.. சூப்பர் சான்ஸ் | Europe cut off the crude oil from Russia, Putin  likely to Get Even More ...

நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட ரயில்கள் மூலம் வேகமாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் ரஷ்ய நிலக்கரி இந்தியாவுக்கு கொடுப்பது இந்தியாவுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *