அண்ணே இது புதுசா இருக்கு..!! தாடி இருந்தால் திருமணம் நிறுத்தப்படும்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் மொத்தம் 19 கிராமங்களைச் சேர்ந்த குமாவத் என்ற சமூகத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு வினோத உறுதிமொழி எடுத்துள்ளது. அதில் நாகரீகம் என்ற பெயரில் இளைஞர்கள் தாடி வைத்து இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் தங்கள் திருமணத்தின் போது எந்த ஒரு மணமகனும் தாடி வைத்திருக்க கூடாது. அப்படி தாடி வைத்திருந்தால் அவர்களின் திருமணம் நிறுத்தப்படும் என்றும் மேலும் தாடியை க்ளீன் ஷேவ் செய்தால் மட்டுமே மணமகள் கழுத்தில் தாலி கட்ட அனுமதிக்க முடியும் என்று புது சட்டம் கட்டளை பிறப்பித்துள்ளது.

Are beards in style for 2021? - Andrew James Hair

மேலும் திருமண வைபவத்தின் போது டிஜே டான்ஸ், டெக்கரேஷன், ஆடம்பரமான ஆடைகள் வாங்குவது போன்றவற்றுக்கும் குமாவத் சமூகத்தினருக்கு அந்த கிராம பஞ்சாயத்து சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளின் போது இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளால் செலவு அதிகமாகும் என்பதால் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கிராம பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 20 ஆயிரம் குமாவத் சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *