ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் நடக்கும் கொடூரம் ..!!! வீதிக்கு வந்த பிரபல செய்தி வாசிப்பாளர்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்ததில் இருந்து அந்நாட்டு மக்கள் அன்றாடம் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் அங்கு பல கடுமையான சட்டங்களை கொண்டு வந்து மட்டுமின்றி ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்.

அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கன் தொலைக்காட்சியில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் உணவுப் பண்டங்களை விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் தான் ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளர் கபீர் அக்மால் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை.

மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லாத நிலையில்  குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறார். ஆப்கனில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *