வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த டெலிகிராம் நிறுவனம்!
கடந்த சில நாட்களாகவே முன்னணி சோசியல் மீடியா நிறுவனங்கள் தங்கள் ப்ரீமியம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து வருகின்றனர். குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் வரும் காலங்களில் பெரிய தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று என்றும் சாதாரண நபர்களுக்கு எப்போதும் இருப்பது போல் நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் டெலிகிராம் செயலியில் புதிய பிரிமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரிமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பளைய நடைமுறையே தொடரும் என தெரிவித்துள்ளார். இந்த புதிய பிரிமியம் பிளான் இந்த மாதத்தில் இருந்து அறிமுகமாக உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.