இனி மலேசியாவில்மரண தண்டனை கிடையாது..!!  மாற்று வழி தேடும் மலேசிய அரசு..!!

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கு மரண தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மரண தண்டனைகளுக்கு எதிரான மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில் மரண தண்டனையை மலேசிய அரசு  தடை செய்துள்ளது. அதாவது மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசு  தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசிய சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைதி ஜாபர் பேசுகையில் தூக்குத் தண்டனைக்கு எதிரான மசோதாவை அமைச்சரவை ஒப்புக்கொண்டது.

Malaysia Moves To Abolish Mandatory Death Penalty » Comp Studio

மரண தண்டனைக்கு பதிலாக வேறு என்ன மாற்று தண்டனைகளை வழங்கலாம்  என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மலேசிய அரசின் இந்த முடிவின் மூலம், மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1000-க்கும் அதிகமானோர் தூக்கு தண்டனை இருந்து விடுதலை பெறுகின்றனர் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது. 

இது அனைத்து தரப்பினரின் உரிமைகள் பாதுகாக்கப் படுவதையும், அவர்களின் வாழ்வை உறுதி செய்வதில் மலேசிய அரசாங்கத்தின் முன்னுரிமையை காட்டுகிறது என்று தெரிவித்தார். மலேசிய அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *