தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பெண்: வெளிவந்த பகீர் பின்னணி?

குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடும் எதிர்ப்புகளை மீறி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளப்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளப்போவதாக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

சோலோகேமி எனப்படும் இந்த சுய திருமணம் பெரும் பேசும் பொருளாக மாற ஒரு தரப்பினர் இந்த திருமணத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால் தனது முடிவில் உருதியாக இருந்த ஷாமா பிந்து அறிவித்ததை விட 3 நாட்களுக்கு முன்னறே தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நாடு முழுக்க பேசப்பட்ட நன்நாளில் தான் ஷாமா பிந்துவின் திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஷாமா பிந்து வீட்டில் நடைப்பெற்ற விழாவில் இந்து மத சடங்குகளின் படி மந்திரங்கள் ஓத தனக்குத்தானே மாலை அணிவித்து நெற்றியில் குங்குமம் வைத்து கழுத்தில் தாலியும் கட்டியுள்ளார்.

சோலோகேமி திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் முன்கூட்டியே விழா நடத்துள்ளதாக பிந்து கூறியுள்ளார். பிந்துவின் நெருங்கிய தோழிகள் உட்பட 10 பேர் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதாக தெரிகிறது. ஒருபுறம் எதிர்ப்பு எழுந்து வந்தாலும் சமூகவலைத்தளங்களில் பலரும் பிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் சம்பவம் இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *