அமேசான் காடுகளை பாதுகாக்க களத்தில் இறங்கிய இரு பெரும் நாடுகள்..!!
பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, எனப் பல முக்கிய நாடுகளில் அமேசான் காடு பரந்து விரிந்துள்ளது.
இந்த விரித்த நிலப்பரப்பை சமீப காலமாக சுரங்க நடவடிக்கைகள் மற்றும் காட்டுத்தீ காரணமாக அமேசான் காடுகள் 20 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு விநாடியும் 1.5 ஏக்கர் அளவில் அமேசான் காடு அழிக்கப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை தவிர்க்க அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க அமெரிக்கா – பிரேசில் நாடுகள் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கலந்து கொண்டனர்.
இருவரின் சந்திப்பின்போது அமேசான் காடுகளை அழிக்கப்படுவதை தடுக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பேசிக்கொண்டு அதன்படி இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர்.
இது தவிர உக்ரைன் போர் குறித்து இரு நாட்டு தலைவர்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலின் மழை காடுகள் அழித்து வந்தாக புள்ளி விவரம் கூறுகிறது.