மருத்துவ உலகில் புதிய சாதனை..!!  புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா..!!

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் புற்றுநோய் மையம் அறிவித்துள்ளது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் புற்றுநோய் மையத்தின் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு தங்கள் மருத்துவ மையத்தில் சுமார் 6 மாதங்களுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட தோஸ்டார்லிமாப் மருந்து அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவருமே புற்றுநோயில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் தெரிவித்துள்ளார்.

இது மிகப் பெரிய வெற்றி என்ற நிலையில் இதை அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு சோதிக்கப்படும் என்றும் அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Clinical Trial Patients Emerge 'Cancer-Free'; Does Cancer Have A Cure?

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகள் இந்தப் பரிசோதனைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. அவர்கள் இதற்கு முன் புற்றுநோயை குணப்படுத்தும் பல்வேறு சிகிச்சைகள் எடுத்துக் கொண்ட பின்னர் இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர்களுக்கு இந்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதன் முடிவில் ஆச்சரியம் அவர்கள் முழுமையாக குணமாகினர் என பெருமிதம் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *