கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்னடா மொசக்குட்டி… இப்போ ரொம்ப ரிலாக்ஸா சுத்திட்டு இருக்க போல…”

“ஆமா சித்தப்பு… இம்புட்டு நாளா ஐ.பி.எல். மேட்ச் போய்ட்டு இருந்ததால… கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்…”

“ஏன்டா மொசக்குட்டி… ஐ.பி.எல். மேட்சையெல்லாம் நீ இன்னும் நம்பிட்டு தான் இருக்கியா?”

“உன்னையே நம்பி உங்கூட சுத்திக்கிட்டு இருக்கேனே சித்தப்பு!!”

“அதுக்கில்லடா… குஜராத் அணி ஜெயிச்சதெல்லாம் முன்கூட்டியே ப்ளான் பண்ணதுன்னு சொல்லிட்டு இருக்காங்களே… உண்மையா?”

“அதென்னவோ எனக்கும் அந்த டவுட்டு உண்டு சித்தப்பு… அமித்ஷா வர்ற வரைக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் நல்லாத்தான் விளையாடிக்கிட்டு இருந்தாய்ங்க… அவரு வந்து உக்காந்ததுமே சொல்லி வச்ச மாதிரி ஒவ்வொருந்தனும் வேணும்னே அவுட்டான மாதிரி அவுட்டானாய்ங்க சித்தப்பு! அதுசரி, இதெல்லாம் யார் சித்தப்பு உங்கிட்ட சொன்னது?”

Amit Shah in IPL 2022 Final: पत्नी संग फाइनल मुकाबला देखने पहुंचे अमित शाह,  फैन्स को दिखाया विक्ट्री साइन - Amit shah with wife sonal shah in narendra  modi stadium ipl final

“அதான் பி.ஜே.பி. எம்பி சுப்பிரமணிய சாமியே சொல்றாரே! அமித்ஷா வந்து மேட்ச் பார்க்கறதால அவரோட மாநில டீமை ஜெயிக்க வச்சதா சொல்லியிருக்காரே!”

“அவரு பாஜக தானா சித்தப்பு? எப்டி அமித்ஷாவையே குறை சொல்லி பேச முடியுது?”

“அடேய்… சில விஷயங்கள் இப்டித்தான் பெரிய இடத்து ரகசியம்… ராஜீவ் காந்தி கொலை தொடர்பா சுப்பிரமணிய சாமிய… சந்திரா சாமிய விசாரிக்கச்சொன்னா விசாரிக்க மாட்டாங்க… அதேபோல தங்களோட கட்சியில இருந்துக்கிட்டே உள்துறை அமைச்சரை கடுமையா விமர்சனம் பண்ணுனாலும் அவரை கண்டுக்க மாட்டாங்க! இதெல்லாம் காரணம் கேட்டாலும் சொல்லமாட்டாங்க! சுப்பிரமணிய சாமி ஒரு நித்தியானந்தா மாதிரிடா…”

“சித்தப்பு… நித்தியானந்தான்னு நீ சொல்லவும் தான் அவரைப் பத்தி கேக்கத் தோணுது… அவரு இப்போ என்ன நிலையில இருக்காரு?”

“அவரு இப்போ கோமா நிலையில இருக்காருடா… ஒரு மனுஷன் ரொம்ப நாளா தலைமறைவாவே வாழ்ந்துட்டு… வீடியோல மட்டுமே விதவிதமா வேஷம் கட்டி சீன் போட்டுட்டு இருந்தாரு…”

“ஆமா சித்தப்பு… அந்தாளு மட்டும் ஆண்டாள்… முருகன்… சிவன்னு கடவுள் வேஷம் போட்டப்பல்லாம் இந்த இந்துத்வா கும்பல் கம்முன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க… அவங்க மனசு புண்படல… இப்ப பாரு…அந்தாளை அந்த தெய்வங்களே தண்டிச்ச மாதிரி யாரையும் பார்க்க முடியாம கோமா ஸ்டேஜுக்கு போயிட்டாரு!”

“ஆமான்டா மொசக்குட்டி… இப்ப அந்தாளு உயிரோட இருக்காரா இல்லையான்னே ஏகப்பட்ட வதந்தி பரவுதுடா!”

നിത്യാനന്ദ എവിടെ? ഓൺലൈനിലും ഇല്ല; മരിച്ചെന്ന് ചർച്ച; സമാധിയിലെന്ന് മറുപടി |  Nithyananda| Godman| Social media| Manorama News

“ஆமா சித்தப்பு…. என்னாச்சு சித்தப்பு திடீர்னு அவருக்கு?”

“அவருக்கு ஸ்லோ பாய்சன் குடுத்துட்டதா சொல்றாங்கடா… நம்ம ‘கட்டெறும்பு புகுந்த நடிகை’யே அவருக்கு ஸ்லோ பாய்சனைக் குடுத்திருப்பாங்கன்னு சொல்றாங்க… இன்னொரு பக்கம், எய்ட்ஸ் பாதிப்பா இருக்கும்னு சொல்றாங்க… ஆக மொத்தத்தில் சாமியார்னு வேஷம் போட்டாலும் நீ வெறும் மனுஷன் தான் அப்டீன்னு இயற்கை சொல்லிடுச்சு… கதவைத்திற காத்து வரும்னு சொன்ன ஆளு… இப்ப மூச்சு விடவே சிரமத்தில்!”

“அதுசரி… இப்போ அண்ணாமலை மாபெரும் போராட்டத்தைப் பண்ணி ஆளுங்கட்சிய மிரள வச்சுட்டாராமே சித்தப்பு!”

“க்கும்,,.அவரு தான் மிரண்டு ஓடிட்டாருன்னு பேசிக்கிறாங்கடா!”

“என்னது, அவரு மிரண்டு ஓடிட்டாரா?”

“ஆமாம்டா… கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம்னு சொன்னார்ல… முற்றுகைன்னா என்ன அர்த்தம்?”

“முற்றுகைன்னா சுத்தி வளைக்கிறது சித்தப்பு”

“ஆனா என்னாச்சுன்னா… மொதல்ல லட்சம் பேரை திரட்டுறதா சொல்லிட்டு… போலீஸ் கணக்குப்படி பார்த்தால் 4000 பேர் தான் வந்திருக்காங்க…”

“அடக்கொடுமையே!”

“அதுமட்டுமா? இந்த மாதிரி போராட்டத்துல போலீஸ் கைது பண்ணுனா என்ன பண்ணுவாங்க… தலைவர்களும் கைதாகி உள்ள போவாங்கல்ல? ஆனா போலீஸ் வந்தது தெரிஞ்சதுமே அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், வேற முக்கிய தலைவர்களும் அவங்கவங்க கார்ல ஏறி எஸ்கேப் ஆகிட்டாங்களாம்!”

“அடங்கொக்காமக்கா!”

TN BJP Stages Protest In Chennai Demanding DMK Govt To Reduce Fuel Price

“பின்ன கூட்டி வந்த கூட்டம் மட்டும் சும்மாவே நிக்குமா என்ன? அவங்களும் ஆளாளுக்கு கெளம்பியிருக்காங்க… அதுல கூட்டி வந்த கூட்டத்துக்கு பணத்தையும் செட்டில் பண்ணாம விட்டிருக்காங்க! அதுல பல பெண்கள் அண்ணாமலையை ரொம்ப மோசமா திட்டியிருக்காங்க! அந்த வீடியோவும் வந்திருக்கு!”

“அடப் பாவமே! ஆக எதையுமே ப்ளான் பண்ணி பண்ணணும்னு நம்ம வைகைப்புயல் சொன்னத அண்ணாமலை ஃபாலோ பண்ணல போல! ஹஹஹ!”

“அதே அதே! இனியாவது போராட்டம்னா கடைசிவரைக்கும் எஸ்கேப் ஆகாம இருக்கக் கத்துக்கட்டும் ஆபீஸர்!! ஹஹஹ!”

  • புத்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *