தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு –வீணை எஸ்.பாலச்சந்தர்

1954-ம் ஆண்டு  வெளியான “அந்த நாள்” திரைப்படம் பல விதங்களில் இன்றும் ஆச்சரியத்துடன் வியக்கும் தொழில் நுட்பங்களைக்கொண்டது என்றால் மிகையில்லை. அதன் இயக்குனரான பாலசந்தர் புதுமைக்கு பேர்போன புதுமைப்பித்தன். அவர் இயக்கிய பொம்மை படத்தின் இறுதிக்காட்சி  சமீபத்தில் கூட இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.  அந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தும் இறுதிக்காட்சி  அது . ஒவ்வொரு  பாத்திரத்தையும் நாடகபானியில் இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகப்படுத்த அவர்கள் சாதரண  உடையில்  தோன்றி பார்வையாளர்களுக்கு வணக்கம் சொல்லும் காட்சி புதுமையாகவும்,  வினோதமானதாகவும் இருந்தது. இந்த விசயத்தில் இவருக்கு முன்னோடியாக, தானே தயாரித்து இயக்கிய  மணமகன் படத்தில் என்.எஸ் கிருஷ்ணன், வசனகர்த்தா கருணாநிதி  உட்பட அனைவரையும் அவர்கள் உருவத்துடன் அறிமுகம் செய்திருப்பார் என்றாலும் இறுதிகாட்சியில் இவ்விதமாக படத்தை முடித்திருப்பது  இன்றுவரையும் வேறு யாரும் செய்யாதது என்பது தான்  குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல்,இப்படியாக தொடர்ந்து புதுப்புது தொழில்நுட்ப பரிசோதனைகளை தன் படங்களில் பயன்படுத்தி தன் பெயரை நிலை நிறுத்திக்கொண்ட வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் இசை, நடிப்பு என பல்துறை ஆற்றல் கொண்ட விந்தைக்கலைஞர். தன் ஏழாம் வயதிலேயே இந்தியா முழுக்க பல கச்சேரிகளுக்கு பயணம் செய்த இசைக்கலைஞர் எனறால் இசையில் அவருக்கிருந்த ஈடுபாடு பற்றி சொல்லத்தேவையில்லை . பிற்பாடு வீணை இசைப்பதிலும் புகழ் பெற்று, வீணை எஸ் பாலசந்தராகவே நிரந்தரமாக அறியப்பட்டவர். 

விருமாண்டி பட ஸ்டைலில் 1950-ல் `அந்த நாள்' எடுத்த வீணை எஸ்.பாலச்சந்தர் |  இன்று ஒன்று நன்று - 18 | the amazing story of veteran artist veena s  balachandar


1927ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் ஐயர்- செல்லம்மாள் தம்பதிக்கு 5 வது குழந்தையாக பிறந்தவர் பாலச்சந்தர்.வழக்கறிஞர் பணி செய்து வந்த சுந்தரத்திற்கு இசையின் மீதும் இசைக் கலைஞர்கள் மீதுமிருந்த ஆர்வம் அளவற்றது. இதனால் மாலை நேரங்களில் அவர்  வீட்டில் அக்காலத்தின்  புகழ் மிக்க இசைக்கலைஞர்களை  காணமுடியும்.இதுவே  பாலசந்தருக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம் வர காரணமாக இருந்தது . சிறு வயதிலேயே  சிதார், கஞ்சிரா, ஹார்மோனியம் ஆகியவை வாசிக்க கற்றுக்கொண்டார். 

அக்காலத்தில் தான் சினிமா பேசத்துவங்கிய நேரம்.  பிரபல வங்காள இயக்குனர் சாந்தாராம்  “சீதா கல்யாணம்” என்ற படதை தமிழில் எடுக்க  வந்து அதில் நடிகர்கள் யாரும் கிடைக்காமல்  கடைசியில்  சுந்தரம் வக்கீல் வீட்டுக்கு வர,சுந்தரம் அவர்கள் தன்  இரண்டு மகன், மகள், மனைவி என ஒட்டுமொத்த குடும்பத்துடன் அப்படத்தில் நடிக்க தயார் என்றார். அப்படியாக புனேக்கு  சென்று, தான் ஜனகராகவும், மகன்  ராஜராமராகவும், மகள் ஜெயலட்சுமி  சீதையாகவும்  நடிக்க படபிடிப்பு நடந்தது. இப்படியாக  அண்ணன் தங்கை  ஜோடியாக நடித்த முதலும் கடைசியுமான  ஒரே தமிழ்ப்படம் என்ற பெயரையும் இப்படம் பெற்றது. இப்படியான சரித்திர புகழ் வாய்ந்த படத்தில் தான் பாலச்சந்தரும் தன் அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க  கஞ்சிரா வாசிக்கும் கலைஞனாக  நடித்து அனைவரது கவனத்தயும் ஈர்த்தார்.   

இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ்.  பாலச்சந்தர்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

சீதா கல்யாணத்திற்குப்பின் பாலசந்தருக்கு நடிப்பில் ஆர்வமில்லை. அதற்கு வாய்ப்பும் அமையவில்லை. தொடர்ந்து கஞ்சிரா கச்சேரி நிகழ்த்த ஆரம்பித்தார். இந்தியாவின் பல இடங்களிலும் சிறுவன் பாலசந்தர் கச்சேரி நடந்தது.1942ல் பாலசந்தருக்கு ஆல் இந்தியா ரேடியோவில் பணி கிடைத்தது.  அந்த காலகட்டத்தில் தான் இசைக் கருவிகளில் தான் இதுவரை கையாண்டிருக்காத பல கருவிகளை பாலசந்தர் கற்றார்.தான் கற்ற இசைக்கருவிகளிலேயே பாலசந்தர் விரும்பி நேசித்த வாத்தியம் வீணைதான்.வீணையை  கற்க யாரையும் அவர் குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

பிற்பாடு திரைத்துறையில் உதவி  இயக்குனராக 1948 ல் வெளியான  “இது நிஜமா” என்ற திரைப்படம்  மூலம்  இன்னுமொரு அவதாரம் எடுத்தார்.தொடர்ந்து அவரது இயக்கத்தில் முதல் படமாக ‘என் கணவர்’ வெளியானது. அடுத்து  1951 ல் தேவகி  இரண்டாவது  படம் இப்படி அடுத்தடுத்த  வெற்றிகளால் பாலசந்தர் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை  பெற்றார்.1952ம் ஆண்டு  ஜிபிடரின் ‘ராணி’ என்ற படம் வந்தது. இதில் பாலசந்தருக்கு கதாநாயகன் வேடம். ஜோடி பானுமதி.

விருமாண்டி பட ஸ்டைலில் 1950-ல் `அந்த நாள்' எடுத்த வீணை எஸ்.பாலச்சந்தர் |  இன்று ஒன்று நன்று - 18 | the amazing story of veteran artist veena s  balachandar

இதனைத்தொடர்ந்து தான் 1954ல் ‘அந்த நாள்’ வெளிவந்தது. தமிழ்த்திரையுலகில் பாடல்கள் இல்லாமல் வெளியான முதல் திரைப்படம் ‘அந்தநாள்’. தொடர்ந்து “அவன் அமரன்”, “நடு இரவில்”  உள்ளிட்ட பல மர்மக்கதைகளை அவர் இயக்கினாலும்  அவற்றில் பொம்மை திரைப்படம்  குறிப்பிடத்தக்கது. 

பொம்மை திரைப்படம் வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. வியாபாரத்தின் நான்கு பங்குதாரர்களில், மூன்று பேர், முதலாமவனைக் கொலை செய்ய சதி செய்கின்றனர். அதற்காக, ஒரு பொம்மைக்குள் வெடி குண்டு வைத்து அவன் பயணிக்கும் விமானத்தில் வைக்க திட்டமிடுகின்றனர். அந்த பொம்மை, பலரிடம் கை மாறிச் சென்று, இறுதியில் வில்லன்களே மாட்டிக் கொள்ளுவதுதான் கதை.

மறக்க முடியுமா... அந்த நாள் | Dinamalar

இந்த பொம்மை படத்தில் வரும் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு  பாடகராக  அறிமுகமானவர் தான்  இன்று பல கோடி இதயங்களின் தன் குரலால் கட்டிப்போடு ஆண்டுகொண்டிருக்கும்  கேஜெ  யேசுதாஸ் அவர்கள்.

வெற்றிகரமான இயக்குனராக இருந்த  பாலசந்தருக்கு ஒருநாள் தான் சினிமாவில் தொடர்ந்து இயங்க வேண்டுமா என்ற சிந்தனை எழுந்தது..  நடு இரவில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தான் திரையுலகிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். ‘வீணைதான் இனி என் வாழ்க்கை’ என்றும் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ந்தது.தொடர்ந்து .. வாழ்நாளின் கடைசி வரை வீணை கலைஞராக வாழ்த்து அந்த பெயருடனேயே அறியப்படவும் செய்தார் . பிற்பாடு 70களில் அவர் கர்நடாக இசைக்கலைஞர்  பாலமுரளிகிருஷ்ணா  இசை விமர்சகர் சுப்புடு ஆகியோருடன் கடும் சர்ச்சைகலின் மூலம் மீண்டும் பத்ரிக்கைகளில் பேசுபொருள் ஆனார்.  இசைப்பணிக்கான நேரத்தை குறைத்துக்கொண்டு வழக்குக்காகவே நேரம் செலவிட்டார். அது அவரது உடல்நிலையை பாதித்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டுவதற்காக 1990- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ந்தேதி பிலாய் சென்றார். இசைக்கலைஞரான  தன் நண்பர் வீட்டில் தங்கிய அந்த இசைமேதை அன்றிரவு தூக்கத்திலேயே மரணத்தை தழுவினார்.

– எழுத்தாளர். அஜயன் பாலா.

(தொடரும்)

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமா வின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *