எலக்ட்ரிக் கார் உருவாக்க தீவிரம் காட்டும் ஓலா நிறுவனம்..!

ஓலா நிறுவனம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் எலக்ட்ரிக் காருக்கான தொழிற்சாலையை தயார்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓலா தனது எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய பிறகு அதன் எலக்ட்ரிக் கார் திட்டத்தில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.
ஓலா தனது மின்சார கார் தொழிற்சாலையை இன்னும் ஒரு வருடத்திற்குள் உருவாக்க திட்டம் மிட்டுள்ளது. அதற்காக உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறுகையில் தனது முதல் மின்சார காரை 2023 க்குள் இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இரண்டு வருடங்களில் தயாராகிவிடும் மேலும் இது இந்தியாவில் பத்து லட்சம் ரூபாய்க்கு கீழ் கிடையாது எனவும் தெரிவித்தார்.

ஓலா தனது மின்சார ஸ்கூட்டருக்கு 10 மில்லியன் யூனிட் தொழிற்சாலையை தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்குள் அமைத்த பிறகு தற்போது எலக்ட்ரிக் கார் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரி வெடிப்பு, தீ விபத்து சர்ச்சைகள் கடுமையாக எழுந்த நிலையில், கடந்த வாரம் ஓட்டிச் செல்லும்போது ஓலா பைக் முன் சக்கரங்கள் தனியே கழன்று சென்றது குறிப்பிடத்தக்கது.