வந்துட்டேனு சொல்லு..!! இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் அம்பாசிடர் கார்

ஆட்டோமொபைல் சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்கிய அம்பாசிடர் கார் மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் அம்பாசிடர் கார் என்றாலே அனைவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும் அந்த அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது. 

அம்பாசிடர் கார்1954ம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய குடும்பங்களின் ஆசை நாயகனாக மட்டும் இல்லாமல் பல  அரசியல் தலைவர்களின் ஆஸ்தான காராகவும் இருந்து.

சில ஆண்டுகளில் அதன் மதிப்பு குறைய தொடங்கியது. பல்வேறு பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வருகைக்கு பின்னர் அம்பாசிடர் காரின் மதிப்பு குறைய தொடங்கியது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாஸ்டர் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்

புதிய கார்களின் ஸ்டைல் மற்றும் வசதிகள் போன்றவற்றிக்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்பாசிடர் இந்திய ஆட்டோமொபைல் ரேஸில் பின் வாங்கியது. ஹிந்துஸ்தான் நிறுவனம் அம்பாசிடர் கார் தயாரிப்பை நிறுத்தியதுடன் அந்த மாடலையும் பிரெஞ்சு கார் நிறுவனமான பியூஜியோட்டிற்கு விற்பனை செய்தது. 

அம்பாசிடர் கார் இந்திய நிறுவனத்தை விட்டு விலகியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது பியூஜியோட் நிறுவனம் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் கைகோர்த்து மீண்டும் அம்பாசிடர் காரை களமிறக்க முடிவெடுத்துள்ளது பியூஜியோட் நிறுவனம்.

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனமாக இது களமிறங்க இருப்பது கூடுதல் சிறப்பு உள்ளது. நவீன வசதிகளுடன் மற்றும் புதிய டிசைனில் களமிறங்கும் அம்பாசிடர் காரின் வேலை 6 முதல் 10 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரக அம்பாசிடர் காரன் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் இந்திய சந்தையில் கால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.