அவதியில் ஆஸ்திரேலியா மக்கள்..! ஆஸ்திரேலியாவில் தொடங்கிய கடும் பனிப்பொழிவு..!!
இயற்கையின் மாறுபாடு என்பது உலக முழுவதும் ஒரே மாதிரி இருக்காது. வருடத்தில் வரும் நான்கு மாற்றங்கள் ஆனா கோடை, குளிர்,மழை, பனி காலம் என இயற்கையின் மாற்றமானது நாட்டிற்கு நாடு மாறுபடும். அந்த வகையில் இந்தியாவிற்கு கோடை காலம் என்றால் ஆஸ்திரேலியாவிற்கு குளிர்காலமாக இருக்கும்.
இந்தியாவிற்கு குளிர்காலம் உள்ள போது ஆஸ்திரேலியாவில் கோடை காலமாக மாறிவிடும் இதற்கு காரணம் இந்தியா வட அரைக்கோளத்தில் உள்ளது ஆஸ்திரேலியா தென் அரைக்கோளத்தில் உள்ளது.
சூரியனின் கதிர்கள் வட அரைக்கோளத்தில் இருந்து தென் அரைக்கோளத்தில் பயணம் செய்வதாலும் இது போன்ற வானிலை மாற்றத்திற்கு காரணமாக உள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது . கோடை காலங்கள் முடிந்து தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் தொடங்கியதையொட்டி சிட்னி நகரில் கடும் பனிப்பொழிவு துவக்கி விட்டது. சிட்னி நகரில் நிலவி வரும் மூடுபனியால், நகரில் உள்ள உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மீது பனி மூடியுள்ளது.
மேலும் அதிகாலை கடுமையான மூடுபனி நிலவி வருவதால் எதிரே வரும் ஆட்கள், கட்டிடங்கள் கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடி உள்ளது.