டீல் ஓகேனா இப்பவே இந்தியாவுக்கு வரேன் –  டெஸ்லா கார் குறித்து எலான் மஸ்க் பதில்..!

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுடைய கார் விற்பனையை சிறப்பாக நடத்தி வரும் டெஸ்லா நிறுவனம் எப்போது இந்தியாவிற்கு வரும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர். 

கடந்த ஆண்டே  இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. கார் தொழிற்சாலை இந்தியாவுக்கு வந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என இந்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் இது தொடர்பாக எலான் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது குறித்து நபர் ஒருவர் டெஸ்லா கார் தொழிற்சாலை இந்தியாவில் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டெஸ்லாவின் விற்பனை மற்றும் சர்வீஸுக்கு அனுமதி வழங்கப்படும் இடத்தில்தான் அதற்கான தொழிற்சாலையும் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tesla's Brand Believers

முன்னதாக இந்தியாவில் டெஸ்லாவை கொண்டு வருவது குறித்து பேசிய எலான் இந்தியாவில் எங்களுடைய கார்களை கொண்டு வர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறினார். டெஸ்லா நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு அதிக வரி விதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் இந்த கார்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மட்டும் இந்தியா வர உள்ளதே இதற்கு முக்கிய காரணம். இதன் காரணமாக அந்த காரின் விலையும் இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க எலோன் மஸ்க் இந்திய அரசிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.