அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் தகவல் !!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கடலூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மற்றும் நாளை மறுதினம் ) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.