7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்!!

லடாக்கில் உள்ள துர்துக் பகுதியில் வாகன விபத்தில் 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் பகுதியில் உள்ள செக்டார் என்ற இடத்தில் 26 ராணுவ நபர்களுடன் வாகனம் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சையோக் ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் 7 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தன்.
இந்நிலையில் மற்ற இராணுவ வீரகள் பலத்த காயமடைந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இந்த விபத்து குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குறிப்பாக லடாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் எங்கள் துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் பலத்த காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.