மக்கள் தொகை குறித்து கேள்வி எழுப்பி மாட்டிக்கொண்ட எலான் மஸ்க்..!!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் பதிவிட்ட கருத்து அனைவருக்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கருவுறுதல் விகிதம் தொடர்பான எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதில் அமெரிக்காவில் கருவுறுதல் விகிதம் என்பது குறைந்துள்ளது என்றும் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் கருவுறுதல் விகிதம் என்பது 2.1-க்கு குறைவாகவே உள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வரைபடத்தில் அமெரிக்காவின் கருவுறுதல் விகிதம் ஏற்கனவே 1.5-ஐ நெருங்கியுள்ளது தெரிவிக்கிறது. நேற்று எலான் மஸ்க் பதிவிடப்பட்ட இந்த ட்விட் இதுவரை பலரும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.
எலான் மஸ்கின் இந்த பதிவிற்கு ட்விட்டரில் பதில் அளித்த ஒருவர் உண்மையாக கூற வேண்டும் என்றால் நிறைய குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினம் என பதிவிட்டுள்ளார்.
அதற்கு எலான் மஸ்க் பிறகு ஏன் பணக்காரர்கள் கூட குறைவான குழந்தைகளையே கொண்டுள்ளனர் என கேள்வி எழுப்பினார். தனக்கு 7 குழந்தைகள் உள்ளனர் என்பதையும் சுட்டி காட்டினார்.
பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு குழந்தைகள் குறைவாக இருக்கும் என பலர் கூறுவார்கள். ஆனால் நான் அதற்கு விதிவிலக்கானவர் எனத் கூறியுள்ளார்.