ரொம்ப நாளுக்கு அப்புறம் சதமடித்த வெயில்; அதுவும் 11 மாவட்டத்தில்!

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மே 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இந்நிலையில் அக்னி வெயில் முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், கரூர், பரமத்தி, தஞ்சை, நாமக்கல், திருச்சி,திருத்தனி ,வேலூர் உட்பட 11 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி இன்று வெயில் சுட்டெரித்தது.

இதனால் வெளியே நடமாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். வரும் இருபத்தி எட்டாம் தேதி கத்திரி வெயில் முடிவடையும் நிலையில் தொடர்ந்து வெயில் அதிகரிக்கும் என்றும் இரவில் புழுக்கம் அதிகம் இருக்கும் என்றும் சென்னையில் கடற்காற்று தாமதமாக வீச தொடங்குவதால் வீரியம் அதிகம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.