கேரளாவை அதிர வைத்த வரதட்சணை கொடுமை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கேரளாவில் வரதட்சனை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் அவர் கணவர் கிரண்குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 24 வயதான விஸ்மயா என்ற பெண் ஆயுர்வேத டாக்டர் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு 100 சவரன் நகை மற்றும் கார் என வரதட்சனையாக வழங்கி அவருடைய பெற்றோர் விஸ்மயாவுக்கு திருமணம் முடித்துள்ளனர்.

இந்நிலையில் கிரண்குமார் தனக்கு எவ்வித வரதட்டனை தேவையில்லை என கூறிய கிரண் திருமணம் முடிந்து கடந்த சில நாட்களிலேயே தனக்கு வாங்கிக்கொடுத்த கார் ஏன் குறைவான விலையில் உள்ளதாக கேள்வி எழுப்பிதாக தெரிகிறது. அதோடு தனக்கு அதிக விலையில் கார்வாங்கி தரவேண்டும் என தொல்லை கொடுத்துள்ளார்.

இதனிடையே அவரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இந்த சூழலில் தன்னை தாக்கிய புகைப்படங்களை உறவினர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பிய நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கேரளா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வரதட்சணைக்காக அரசு அதிகாரி தனது மனைவியை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இருந்த கேரள கவர்னர் விஸ்மயா பெற்றோர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இதனிடையே இந்த வழக்கில் விசாரணை இன்று அமர்வில் வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தனர். மேலும் இவருக்கான தீர்ப்பை விரைவில் வழங்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.